Enable Javscript for better performance
கல்லூரி மாணவர் தூக்கிட்டுத் தற்கொலை:  சடலத்துடன் உறவினர்கள் மறியல்- Dinamani

சுடச்சுட

    

    கல்லூரி மாணவர் தூக்கிட்டுத் தற்கொலை:  சடலத்துடன் உறவினர்கள் மறியல்

    By  தருமபுரி,  |   Published on : 30th July 2014 08:35 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தருமபுரி மாவட்டம், பெரும்பாலை அருகே தனியார் கல்லூரி மாணவர் செவ்வாய்க்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதையடுத்து, சடலத்துடன் உறவினர்கள் சாலை மறியிலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
     பெரும்பாலை அருகேயுள்ள பழையூரைச் சேர்ந்தவர் சர்க்கரை. விவசாயி. இவரது மகன் சிவக்குமார் (19). சேலம் மாவட்டம், மேச்சேரியில் உள்ள தனியார் கல்லூரியில் டிப்ளமோ இரண்டாமாண்டு படித்து வந்தார்.
     இந்த நிலையில், கல்லூரிக் கட்டணம் செலுத்தாததால் வகுப்பறையில் இருந்து சிவக்குமார் வெளியேற்றப்ட்டாராம். இதனால், மனமுடைந்த அவர் செவ்வாய்க்கிழமை வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
     இதையடுத்து, கல்லூரி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, பழையூர் சாலையில் சடலத்துடன் உறவினர்கள் சுமார் 100 பேர் மறியலில் ஈடுபட்டனர்.
     தகவலறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற பெரும்பாலை போலீஸார், மறியலில் ஈடுபட்டவர்களை சமாதானப்படுத்தியதால், ஒரு மணி நேரம் நீடித்த மறியல் விலக்கிக் கொள்ளப்பட்டது.
     இதையடுத்து, சிவக்குமாரின் சடலம் உடல்கூறு ஆய்வுக்காக பென்னாகரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
     சம்பவம் குறித்து பெரும்பாலை போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
     
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai