Enable Javscript for better performance
தருமபுரியில் ஆகஸ்ட் 1-இல்  விடுதலைச் சிறுத்தைகள்  மாவட்ட செயற்குழுக் கூட்டம்- Dinamani

சுடச்சுட

    

    தருமபுரியில் ஆகஸ்ட் 1-இல்  விடுதலைச் சிறுத்தைகள்  மாவட்ட செயற்குழுக் கூட்டம்

    By  தருமபுரி,  |   Published on : 30th July 2014 09:08 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தருமபுரி மாவட்ட, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயற்குழு கூட்டம் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 1) நடைபெற உள்ளதாக அந்தக் கட்சியின் மாவட்டச் செயலாளர் எம்.எஸ்.ராமன் தெரிவித்தார்.
     இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:
     கட்சியின் தருமபுரி மாவட்டச் செயற்குழுக் கூட்டம் வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு பெரியார் மன்றத்தில் நடைபெற உள்ளது. கூட்டத்தில், மாநில நிர்வாகிகள் கலந்து கொண்டு வருகிற 17-ஆம் தேதி சேலத்தில் நடைபெற உள்ள கல்வி உரிமை மாநாடு குறித்துப் பேச உள்ளனர்.
     எனவே, தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த கட்சியின் நிர்வாகிகள், அனைத்து நிலைப் பொறுப்பாளர்கள், செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொள்ள வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai