Enable Javscript for better performance
தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ரமலான் சிறப்புத் தொழுகை - Dinamani

சுடச்சுட

    

    தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ரமலான் சிறப்புத் தொழுகை

    Published on : 30th July 2014 09:08 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ரமலான் பண்டிகையை முன்னிட்டு, தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சிறப்புத் தொழுகையில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் பங்கேற்றனர்.
     தருமபுரியில்.. ரமலான் மாதத்தை முன்னிட்டு கடந்த ஒரு மாதமாக இஸ்லாமியர்கள் நோன்பைக் கடைப்பிடித்து வந்த நிலையில், பிறை தெரிந்ததால் ரமலான் பண்டிகை செவ்வாய்க்கிழமை கொண்டாடினர்.
     தருமபுரி ராமாக்காள் ஏரி அருகேயுள்ள ஈத்கா மைதானத்தில் நடைபெற்ற சிறப்புத் தொழுகையில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் புத்தாடை அணிந்து கலந்து கொண்டனர். அதேபோல, மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி வாசல்களிலும் சிறப்புத் தொழுகை நடைபெற்றது.
     இதில் பங்கேற்ற இஸ்லாமியர்கள் ஒருவருக்கொருவர் கட்டியணைத்து ரமலான் வாழ்த்துக்களைப் பகிர்ந்து கொண்டனர்.
     கிருஷ்ணகிரியில்... கிருஷ்ணகிரியில் ராஜீவ் நகர், ராயக்கோட்டை மேம்பாலம் அருகேயுள்ள ஈத்கா மைதானம், நமாஸ் பாறை ஆகிய இடங்களில் நடைபெற்ற சிறப்புத் தொழுகையில் நூற்றுக்கணக்கான இஸ்லாமியர்கள் பங்கேற்றனர். தொழுகைக்குப் பின்னர், ஒருவரை ஒருவர் கட்டித் தழுவியும், இனிப்புகளை வழங்கியும் வாழ்த்துகளைப் பகிர்ந்து கொண்டனர்.
     கிருஷ்ணகிரி - பெங்களூரு சாலை அருகேயுள்ள மசூதியில் நடைபெற்ற சிறப்புத் தொழுகையில் பெண்கள் பங்கேற்று தொழுகையில் ஈடுபட்டனர்.
     கிருஷ்ணகிரி மாவட்டத்தில் போச்சம்பள்ளி, ஊத்தங்கரை, காவேரிப்பட்டணம், வேப்பனஅள்ளி, ராயக்கோட்டை, தேன்கனிக்கோட்டை, ஜெகதேவி, சூளகிரி, பர்கூர், சுற்றுப் பகுதிகளில் வசிக்கும் இஸ்லாமியர்கள் புத்தாடை அணிந்து, ஆங்காங்கே நடைபெற்ற சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டனர்.
     ஒசூரில்... ஒசூரில் நகர் மைதானம், என்.ஜி.ஓ காலனி உள்பட பல இடங்களில் சிறப்புத் தொழுகை நடைபெற்றது.
     இதில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் பங்கேற்று தொழுகையில் ஈடுபட்டனர். பின்னர், ஒருவருக்கொருவர் வாழ்த்துத் தெரிவித்துக் கொண்டனர். தொடர்ந்து, ஏழைகளுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கிக் கொண்டாடினர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai