Enable Javscript for better performance
மாவுப் பூச்சியைக் கட்டுப்படுத்தும்  விழிப்புணர்வு முகாம்- Dinamani

சுடச்சுட

    

    மாவுப் பூச்சியைக் கட்டுப்படுத்தும்  விழிப்புணர்வு முகாம்

    By  தருமபுரி,  |   Published on : 30th July 2014 08:59 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பப்பாளி, மரவள்ளியில் மாவுப் பூச்சியைக் கட்டுப்படுத்துவது குறித்த விழிப்புணர்வு முகாம் அண்மையில் பி.மோட்டுப்பட்டியில் நடைபெற்றது.
     வேளாண்மை விரிவாக்க துணை இயக்கம், வேளாண் அறிவியல் நிலையம் சார்பில் நடைபெற்ற இந்த முகாமுக்கு உழவர் பயிற்சி நிலைய வேளாண்மை துணை இயக்குநர் பெ.பாஸ்கர் தலைமை வகித்தார்.
     முகாமில், பூச்சியியல் துறை விஞ்ஞானி சண்முகம் பேசியது:
     பப்பாளி, மரவள்ளி,
     கொய்யா, நீலசம்பங்கி போன்ற பயிர்களில் கடந்த மூன்று ஆண்டுகளாக மாவுப் பூச்சிகளின் தாக்குதல் அதிகரித்து வருகிறது. இதைக் கட்டுப்படுத்த விவசாயிகள் பெருந்தொகையை பூச்சுக் கொல்லி மருத்திற்காக செலவிடுகின்றனர். இதனால், விவசாயிகளுக்கு வருவாய் குறைந்து பாதிப்புக்குள்ளாகின்றனர்.
     இதைத் தவிர்க்க, உயிரியல் முறையில் ஒட்டுண்ணிகளை (அஸிரோபாகல் பப்பயா) கொண்டு மாவுப் பூச்சியைக் கட்டுப்படுத்தலாம் என்றார்.
     இதில் விவசாயிகள் 10 பேருக்கு ஒட்டுண்ணிகள் இலவசமாக வழங்கப்பட்டன. இந்த முகாமில், வேளாண் அறிவியல் நிலைய பேராசிரியர் தமிழ்செல்வன், கிருஷ்ணாபுரம் வேளாண் அலுவலர் செல்வம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai