Enable Javscript for better performance
வட்டாட்சியர்கள்  இடமாற்றம்- Dinamani

சுடச்சுட

    

    தருமபுரி மாவட்டத்தில் வட்டாட்சியர்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர்.
     தருமபுரி ஆட்சியரகத்தில் அலுவலக மேலாளராக (நீதியியல்) பணியாற்றிய தமிழரசன், பாலக்கோடு வட்டாட்சியராகவும், தருமபுரி வட்ட வழங்கல் அலுவலர் பாரதி, தருமபுரி வட்டாட்சியராகப் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டனர்.
     அதேபோல, தருமபுரி தலைமையிடத்து துணை வட்டாட்சியர் ராதாகிருஷ்ணன் பதவி உயர்வு பெற்று, தருமபுரி வட்ட வழங்கல் அலுவலராகவும், பாலக்கோடு வட்டாட்சியர் லதா, தருமபுரி தேர்தல் பிரிவு தனி வட்டாட்சியராகவும் பணியிடமாற்றம் செய்யப்பட்டனர்.
     தருமபுரி தேர்தல் பிரிவு தனி வட்டாட்சியர் சரவணன், ஆட்சியரகத்தில் அலுவலக மேலாளராக (நீதியியல்) பணியிட மாற்றம் செய்து மாவட்ட ஆட்சியர் கே.விவேகானந்தன் உத்தரவு பிறப்பித்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai