Enable Javscript for better performance
வயிற்றுப் போக்கு தடுப்பு முகாம்- Dinamani

சுடச்சுட

    

    தருமபுரி மாவட்டம், தீர்த்தமலையில் வட்டார அளவிலான இருவார தீவிர வயிற்றுப்போக்கு தடுப்பு முகாம் திங்கள்கிழமை தொடங்கியது.
     வட்டார மருத்துவ அலுவலர் ஆர்.தொல்காப்பியன் தலைமை வகித்து முகாமை தொடக்கிவைத்தார்.
     கிராம செவிலியர்கள், அங்கன்வாடிப் பணியாளர்கள் கிராமங்களில் வீடு வீடாகச் சென்று 5 வயதுக்கு உள்பட்ட குழந்தைகளுக்கு உப்பு, சர்க்கரைக் கரைசல் (ஒ.ஆர்.எஸ்), துத்தநாக மாத்திரைகளை வழங்கி, அதை சாப்பிடும் முறைகள் குறித்து விளக்கினர். இதில், அரசு மருத்துவர்கள் எம்.மகாலட்சுமி, சமுத்திரம், சி.ஆர்.அருண்குமார், கண் மருத்துவ உதவியாளர் கு.கலையரசன் உள்பட 30-க்கும் மேற்பட்ட கிராம செவிலியர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai