Enable Javscript for better performance
விலையில்லா மிதிவண்டிகள்:  ஆட்சியர் அளிப்பு- Dinamani

சுடச்சுட

    

    தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் திங்கள்கிழமை நடைபெற்ற விழாவில் 230 மாணவிகளுக்கு ரூ.8 லட்சம் மதிப்பிலான விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டன.
     விழாவுக்கு தலைமை வகித்த மாவட்ட ஆட்சியர் கே.விவேகானந்தன், 230 மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள், மாவட்ட அளவில் அரசுப் பள்ளிகளில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தேர்வுகளில் முதலிடம், இரண்டாமிடம் பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கிப் பேசினார்.
     விழாவில், பாலக்கோடு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் கே.பி.அன்பழகன், பள்ளித் தலைமை ஆசிரியை கே. செந்தமிழ்செல்வி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai