Enable Javscript for better performance
அரசு மருத்துவமனையில் நோயாளிகளைப் பார்க்க அடையாள அட்டை முறை- Dinamani

சுடச்சுட

    

    அரசு மருத்துவமனையில் நோயாளிகளைப் பார்க்க அடையாள அட்டை முறை

    By தருமபுரி,  |   Published on : 31st July 2014 03:16 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தருமபுரி அரசு மருத்துவமனையில் நோயாளிகளைப் பார்க்க வரும் பார்வையாளர்களுக்கு அடையாள அட்டை முறையை மாவட்ட ஆட்சியர் கே.விவேகானந்தன் புதன்கிழமை தொடக்கிவைத்தார்.

    தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள் நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டுள்ளவர்களை உறவினர்கள், நண்பர்கள் பார்ப்பதற்கு தினமும் வந்து செல்கின்றனர். இதுதவிர உள்நோயாளிகளுக்குத் தேவையானதைப் பெற்றுத் தருவதற்கு உதவியாளர்கள் மருத்துவமனையில் தங்குகின்றனர்.

    இவர்களுக்கான அடையாள அட்டை முறையை மாவட்ட ஆட்சியர் கே.விவேகானந்தன் புதன்கிழமை தொடக்கிவைத்தார். இதில், மருத்துவக் கல்லூரி முதல்வர் ரா.சாந்திமலர், உள்ளிருப்பு மருத்துவர் ஆர்.சுரபி, மருத்துவக் கண்காணிப்பாளர் சிவக்குமார், துணைக் கண்காணிப்பாளர் இளங்கோவன், துணை உதவி உள்ளிருப்பு மருத்துவர் கோபிநாத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நோயாளிகளைப் பார்க்க வரும் பார்வையாளர்களுக்கு நீல நிறமும், நோயாளிகளுடன் தங்கியிருக்கும் உதவியாளர்களுக்கு ரோஸ் நிற அட்டையும் ஒதுக்கப்பட்டுள்ளது. பார்வையாளர்கள் அதற்கான அட்டையைப் பயன்படுத்தி நோயாளிகளைப் பார்க்க மாலை 4 மணி முதல் 6 மணி வரை மட்டும் அனுமதிக்கப்படுவர்.

    இந்த அட்டையைப் பயன்படுத்தி ஒவ்வொருவராக மருத்துவமனைக்குள் சென்று வரலாம். உதவியாளருக்கான அட்டையைப் பயன்படுத்தி நோயாளியுடன் ஒருவர் மட்டும் தங்க அனுமதிக்கப்படுவர் என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai