Enable Javscript for better performance
இரு சக்கர வாகனங்களை மாணவர்கள் ஓட்டினால் நடவடிக்கை: வட்டாரப் போக்குவரத்து அலுவலர்- Dinamani

சுடச்சுட

    

    இரு சக்கர வாகனங்களை மாணவர்கள் ஓட்டினால் நடவடிக்கை: வட்டாரப் போக்குவரத்து அலுவலர்

    By தருமபுரி,  |   Published on : 31st July 2014 03:17 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தருமபுரியில் பள்ளி மாணவ, மாணவிகள் இரு சக்கர வாகனங்களை ஓட்டினால் நடவடிக்கை எடுக்கப்படும் என, வட்டாரப் போக்குவரத்து அலுவலர் தெரிவித்தார்.

    தருமபுரி வட்டாரப் போக்குவரத்து அலுவலர் அசோக்குமார் தலைமையில் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் மாணவர்கள் இரு சக்கர வாகனங்களை ஓட்டுவதைத் தவிர்க்க, நகரில் உள்ள பள்ளிகளின் முன் புதன்கிழமை கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது, 56 மாணவர்கள் பள்ளிகளுக்கு இரு சக்கர வாகனங்களை ஓட்டி வந்தது தெரிய வந்தது. இதையடுத்து, அந்த மாணவர்களை எச்சரிக்கை செய்து அனுப்பினர். தொடர்ந்து, வட்டாரப் போக்குவரத்து அலுவலர் அசோக்குமார் கூறியது:

    18 வயது நிரம்பாத, ஓட்டுநர் உரிமம் இல்லாத யாரும் வாகனங்களை ஓட்டக் கூடாது. பள்ளி சிறுவர்கள் வாகனம் இயக்குவதை பெற்றோர் ஊக்குவிக்கக் கூடாது. மீறி, வாகனங்கள் ஓட்ட அனுமதித்தால், அந்த வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

    அதே போல, இரு சக்கர வாகனங்களில் மாணவர்கள் பள்ளிக்கு வருவதை அனுமதிக்கும் பள்ளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai