Enable Javscript for better performance
இளைஞர் கொலை: 3 பேரிடம் விசாரணை- Dinamani

சுடச்சுட

    

    அரூர் அருகே இளைஞரை கழுத்தறுத்துக் கொலை செய்தது தொடர்பாக 3 பேரிடம் போலீஸார் புதன்கிழமை விசாரணை மேற்கொண்டனர்.

    அரூர் ஒன்றியம், எச்.தொட்டம்பட்டியைச் சேர்ந்தவர் முனியப்பன். இவர் தருமபுரி மாவட்டத்தில் சிறப்புக் காவல் உதவி ஆய்வளராகப் பணிபுரிகிறார்.

    இவரது மகன் கணேசன் (23). இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவருக்கும் கள்ளத் தொடர்பு இருந்ததாம். கடந்த சில மாதங்களுக்கு முன் வீட்டில் இருந்து வெளியே சென்ற கணேசன் வீடு திரும்பவில்லையாம்.

    இந்த நிலையில், கடந்த பிப்ரவரி 18-ஆம் தேதி, சுமார் 25 வயது மதிக்கதக்க இளைஞர் ஒருவர் கழுத்து அறுக்கப்பட்டு, முகம் சிதைந்த நிலையில் அரூர் பெரிய ஏரியில் சடலமாக மீட்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்து அரூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில், அரூர் பெரிய ஏரி பகுதியில் சடலமாக மீட்கப்பட்டவர் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் முனி

    யப்பன் மகன் கணேசன் என்பது தெரிய வந்தது.

    தொடர்ந்து, இளைஞர் கணேசன் கள்ளக்காதல் விவகாரத்தில் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டு, சடலத்தை ஏரிக்கரையில் வீசியது தெரிய வந்தது.

    இந்த சம்பவம் தொடர்பாக 3 பேரிடம் தனிப்படை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai