Enable Javscript for better performance
ஒகேனக்கல்லில் ஆக.2-இல் ஆடிப்பெருக்கு விழா - Dinamani

சுடச்சுட

    

    ஒகேனக்கல்லில் ஆடிப்பெருக்கு விழா வருகிற சனிக்கிழமை (ஆக.2) நடைபெறுகிறது.

    தருமபுரி மாவட்ட நிர்வாகம், சுற்றுலாத் துறை சார்பில் நடைபெற உள்ள விழாவை மாநில உயர்கல்வித் துறை அமைச்சர் பி.பழனியப்பன் தொடக்கி வைத்து பல்துறை பணிவிளக்கக் கண்காட்சியைத் திறந்து வைக்கிறார்.

    மாவட்டச் சுற்றுலா கையேடு, நலத்திட்ட உதவிகளை மாநில சுற்றுலாத் துறை அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் வழங்கிப் பேசுகிறார். மாவட்ட ஆட்சியர் கே.விவேகானந்தன் தலைமை வகிக்கிறார். அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் ரா.கண்ணன் முன்னிலை வகிக்கிறார். விழாவையொட்டி சுற்றுலா, கலைப் பண்பாட்டுத் துறை, தென்னகப் பண்பாட்டு மையம் உள்ளிட்ட துறைகள் சார்பில் 3 நாள்களுக்குப் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai