Enable Javscript for better performance
கட்டுமானத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்- Dinamani

சுடச்சுட

    

    கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கட்டுமானத் தொழிலாளர்கள் தருமபுரி பி.எஸ்.என்.எல். அலுவலகம் அருகே புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    தமிழ்நாடு ஜனநாயக கட்டுமானத் தொழிலாளர்கள் சங்கம் சார்பில், நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்டக் கட்டுமான அமைப்பாளர் வேல்.சின்னச்சாமி தலைமை வகித்தார்.

    கட்டுமானத் தொழிலாளர் நல நிதிக்கான செல் வரி ஒரு சதமாக உயர்த்தப்பட்டதால் தொழிலாளர் நலநிதியை உயர்த்தி வழங்க வேண்டும். நலவாரிய நிர்வாக நடவடிக்கைகளில் ஆளும்கட்சிப் பிரதிநிதிகள் இடம் பெறுவதை மாற்றி மற்றச் சங்கங்களுக்கும் உறுப்பினர் எண்ணிக்கைக்கு ஏற்ப பிரதிநிதித்துவம் அளிக்க வேண்டும்.

    சென்னை மெளலிவாக்கம் கட்டட விபத்தில் உயிரிழந்த தொழிலாளர்களுக்கு இழப்பீடாக ரூ.25 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.5 லட்சம் அளிப்பதோடு, விதிமுறைகளை மீறியவர்களுக்கு உரிய தண்டனையை தமிழக அரசு பெற்றுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    கட்டுமானத் தொழிலாளர்களுக்கு பொங்கல் போனஸ் ரூ.15,000 வழங்குவதோடு, இலவசப் பேருந்து அட்டை அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலத் தலைவர் கொ.கோவிந்தராஜ், அம்பேத்கர் மணியாளர் பொறியாளர் சங்க மாநில அமைப்புச் செயலாளர் சி.முருகன் உள்ளிட்டோர் பேசினர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai