Enable Javscript for better performance
கணிதப் பாட கருத்தாளர்களுக்கு பயிற்சி முகாம் தொடக்கம்- Dinamani

சுடச்சுட

    

    கணிதப் பாட கருத்தாளர்களுக்கு பயிற்சி முகாம் தொடக்கம்

    By தருமபுரி,  |   Published on : 31st July 2014 03:16 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தருமபுரி மாவட்டம், தொப்பூரில் கணிதப் பாடக் கருத்தாளர்களுக்கு மண்டல அளவிலான மூன்று நாள் பயிற்சி முகாம் புதன்கிழமை தொடங்கியது.

    தொப்பூரில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற பயிற்சி முகாமை, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கே.பி.மகேஸ்வரி தொடக்கிவைத்தார்.

    உதவித் திட்ட ஒருங்கிணைப்பாளர் மு.மதிவாணன், பயிற்சியாளர்கள் ப.ராசன், மகேந்திரன், செந்தில்குமார், புவனேஸ்வரன் ஆகியோர் செயல்முறை விளக்கம் மூலம் கணிதப் பாடத்தை மாணவர்களுக்கு கற்பிப்பது, வாழ்க்கையோடு இணைந்து கணிதத்தை கற்பிப்பது குறித்து பயிற்சியளித்தனர்.

    முகாமில், பெரம்பலூர், கோவை, நீலகிரி, சேலம், கிருஷ்ணகிரி, தருமபுரி ஆகிய கல்வி மாவட்டங்களைச் சேர்ந்த 52 பேர் பங்கேற்றனர்.

    இதில், கல்லூரி முதல்வர் ரகுநாதன், கணித துறைத் தலைவர் ஜெகநாதன், இடைநிலைக் கல்வித் திட்ட ஒருங்கிணைப்பாளர் கே.ராஜகோபால் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்தப் பயிற்சி முகாம் ஆக.1-ஆம் தேதி வரை நடைபெறும்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai