Enable Javscript for better performance
பாடல் ஒப்பித்தல் போட்டி: அரசுப் பள்ளி மாணவர் முதலிடம்- Dinamani

சுடச்சுட

    

    பாடல் ஒப்பித்தல் போட்டி: அரசுப் பள்ளி மாணவர் முதலிடம்

    By தருமபுரி,  |   Published on : 31st July 2014 03:17 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தருமபுரியில் நடைபெற்ற பாரதிதாசன் பாடல் ஒப்பித்தல் போட்டியில் மானியஅள்ளி அரசுப் பள்ளி மாணவர் முதலிடத்தைப் பெற்றார்.

    தருமபுரியில் அண்மையில் திமுக சார்பில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பாரதிதாசன் பாடல்கள் ஒப்பித்தல் போட்டி நடத்தப்பட்டது.

    இந்தப் போட்டியில், மானியஅள்ளி அரசு மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் 8-ஆம் வகுப்பு மாணவர் ஏ.விக்னேஷ் பங்கேற்று முதலிடத்தைப் பிடித்து ரூ. 5 ஆயிரம் பரிசுத் தொகை பெற்றார். மேலும், அதே பள்ளியைச் சேர்ந்த பிளஸ் 2 மாணவி மணிமேகலை இரண்டாம் பரிசும், 8-ஆம் வகுப்பு மாணவி என்.மஞ்சுளா சிறப்புப் பரிசும் பெற்றனர்.

    இந்த மாணவ, மாணவிகளை பள்ளித் தலைமை ஆசிரியை க.அமுதவல்லி, உதவித் தலைமை ஆசிரியர்கள் ஜி.கோவிந்தசாமி, வீ.மாது, ஆசிரியர்கள் புதன்கிழமை பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்..

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai