Enable Javscript for better performance
மாணவர்களுக்கு வங்கி கணக்கு புத்தகம் அளிப்பு- Dinamani

சுடச்சுட

    

    தருமபுரி மாவட்டம், புலிகரை அரசு உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு வங்கிக் கணக்குப் புத்தகம் புதன்கிழமை வழங்கப்பட்டது.

    பத்தாம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகைகள் வங்கிக் கணக்கு மூலம் வழங்கப்பட்டு வருகின்றன.

    இந்த உதவித் தொகை பெற ஏதுவாக இந்தியன் வங்கி சார்பில், புலிகரை அரசு உயர்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு வங்கிக் கணக்கை பள்ளியிலே சென்று அவர்களது விவரங்களைக் கணினி மூலம் பதிவு செய்து சேமிப்புக் கணக்கு தொடங்கப்பட்டது.

    பின்னர், சேமிப்புக் கணக்குப் புத்தகங்கள் மாணவ, மாணவிகளுக்கு பள்ளியில் வழங்கப்பட்டன . இந்த நிகழ்ச்சியில், பள்ளித் தலைமை ஆசிரியர் மா.சின்னமாது, இந்தியன் வங்கிக் கிளை மேலாளர் பி.ராமன், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai