Enable Javscript for better performance
அன்புமணி ராமதாஸுக்கு கூடுதல்  பாதுகாப்பு அளிக்க வலியுறுத்தல்- Dinamani

சுடச்சுட

    

    அன்புமணி ராமதாஸுக்கு கூடுதல்  பாதுகாப்பு அளிக்க வலியுறுத்தல்

    By  தருமபுரி,  |   Published on : 27th March 2014 09:47 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தருமபுரி மக்களவைத் தொகுதியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள அன்புமணி ராமதாஸ் மீது தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளதால் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என அந்தக் கட்சி வலியுறுத்தியுள்ளது.
     இதுகுறித்து பாமக மாநில துணை பொதுச் செயலாளர் அ.சரவணன் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஆஸ்ரா கர்க்கிடம் புதன்கிழமை அளித்த மனு:
     தமிழகத்தில் பாமகவின் தேர்தல் பிரசாரத்தை தடுப்பதோடு, குழப்பம் விளைவிக்க வன்முறை சக்திகள் திட்டமிட்டுள்ளன.
     ஆரணி தொகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்ட முன்னாள் மத்திய அமைச்சர் மூர்த்தி மீது வந்தவாசியில் பெரிய காலனி பகுதியில் கொலை வெறித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
     அதேபோல, அரக்கோணத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் அரங்கவேலு வாகனம் மீது கல்கள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டது.
     தமிழகம் முழுவதிலும் காலனி பகுதிகளில் வாக்கு சேகரிக்க செல்லும் போது திட்டமிட்ட தாக்குதலை சமூக விரோத சக்திகள் செய்து வருகின்றன. இதன் பின்னணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி இருப்பதாக எங்களுக்கு சந்தேகம் இருக்கிறது.
     இந்தச் சூழலில், தருமபுரி தொகுதியில் போட்டியிடும் அன்புமணி ராமதாஸ் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடும் போது அவர் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது. எனவே, அவருக்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
     இதுகுறித்து ஆட்சியரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான கே.விவேகானந்தனை நேரில் சந்தித்து வலியுறுத்தப்பட்டுள்ளது.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai