Enable Javscript for better performance
காசநோய் தடுப்பு உறுதிமொழி ஏற்பு- Dinamani

சுடச்சுட

    

    தருமபுரி ஒன்றியம், மூக்கனஅள்ளி அரசு உயர்நிலைப் பள்ளியில் காசநோய் தடுப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
     பள்ளியின் தேசிய பசுமைப் படை அமைப்பின் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியர் டி.ரவிக்குமார் தலைமை வகித்தார். மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் காசநோய் எதிர்ப்பு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
     பட்டதாரி ஆசிரியர்கள் விக்கிரமன், ரமேஷ், மோகனசுந்தரி, தமிழாசிரியர் வெங்கடேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை தேசிய பசுமைப் படை ஆசிரியர் மு.கா.நெடுமாறன் செய்திருந்தார்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai