Enable Javscript for better performance
திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாக தேசிய ஜனநாயகக் கூட்டணி:  அன்புமணி ராமதாஸ்- Dinamani

சுடச்சுட

    

    திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாக தேசிய ஜனநாயகக் கூட்டணி:  அன்புமணி ராமதாஸ்

    By  தருமபுரி  |   Published on : 27th March 2014 09:46 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தமிழகத்தை 47 ஆண்டுகளாக ஆட்சி செய்து வரும் திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாக தேசிய ஜனநாயகக் கூட்டணி உருவாகியுள்ளதாக அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.
     தருமபுரி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் பாமக வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் பென்னாகரம் வடக்கு ஒன்றியத்துக்குள்பட்ட பெரியூரில் புதன்கிழமை தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார்.
     தொடர்ந்து பி.கொல்லப்பட்டி, பிக்கிலி, திருமல்வாடி, பனைக்குளம், சொரக்காப்பட்டி உள்பட 45 கிராமங்களில் பிரசாரத்தில் ஈடுபட்டார்.
     சொரக்காப்பட்டியில் ஆரத்தி எடுத்து வரவேற்ற பெண்கள் மத்தியில் அன்புமணி ராமதாஸ் பேசியது:
     தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்றால் நரேந்திரமோடி தான் பிரதமர். ஊழலை ஒழித்து நல்லாட்சி தருவதோடு, விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்துவார்.
     தமிழகத்தை 47 ஆண்டுகளாக ஆட்சி செய்து வரும் திமுக, அதிமுகவுக்கு மாற்றாக சக்தி வாய்ந்த கூட்டணியாக உருவாகியுள்ளது. திமுக, அதிமுக பணம் கொடுப்பார்கள்.
     அதற்கு மயங்கி விடாமல் என்னை வெற்றி பெறச் செய்தால் டாஸ்மாக் மதுக் கடைகளை மூடுவோம். நாடு முழுவதும் 108 ஆம்புலன்ஸ் திட்டத்தை மத்திய சுகாதாரத் துறை அமைச்சராக இருந்த போது கொண்டு வந்தேன். அதேபோல, இந்தத் தொகுதி மக்கள் பயனடையும் வகையில் பல்வேறு திட்டங்களை கொண்டு வருவேன் என்றார் அவர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai