Enable Javscript for better performance
தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற  மாணவர்களுக்கு ஆலோசனை- Dinamani

சுடச்சுட

    

    தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற  மாணவர்களுக்கு ஆலோசனை

    By  ஊத்தங்கரை  |   Published on : 27th March 2014 09:43 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    எஸ்எஸ்எல்சி தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறுவது குறித்து ஊத்தங்கரையை அடுத்த உப்பாரப்பட்டி அரசுப் பள்ளி மாணவர்களுக்கு செவ்வாய்க்கிழமை ஆலோசனை அளிக்கப்பட்டது.
     உப்பாரப்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் ரவி தலைமையில் நடைபெற்ற மாணவர்களுக்கு ஆலோசனை வழங்கும் நிகழ்ச்சியில் ஊராட்சி மன்றத் தலைவர் சிவலிங்கம், பெற்றோர்- ஆசிரியர் கழகத் தலைவர் ராமசந்திரன், செல்வராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
     நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் ஜனார்த்தனம், ராஜா, முனுசாமி, கௌரி, வள்ளி, திருப்பதி, கவிஞர் சாகுல்அமீது, சரவணப்பிரியா, ராஜேஷ், ஆஸ்ட்லின்துரை உள்ளிட்ட பலர் எஸ்எஸ்எல்சி தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறுவது குறித்து ஆலோசனை வழங்கினர். மாணவ, மாணவிகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டன. ஆசிரியை சங்கமித்ரை நன்றி கூறினார்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai