Enable Javscript for better performance
நோய் அறிந்து சிகிச்சை அளிக்க வேண்டும்:  மருத்துவக் கல்வி இயக்குநர் கீதாலட்சுமி- Dinamani

சுடச்சுட

    

    நோய் அறிந்து சிகிச்சை அளிக்க வேண்டும்:  மருத்துவக் கல்வி இயக்குநர் கீதாலட்சுமி

    By  தருமபுரி,  |   Published on : 27th March 2014 09:48 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மருத்துவர்கள் நோய்கள் குறித்து அறிந்து, அதற்கேற்றவாறு சிகிச்சை அளிக்க வேண்டும் என்று மருத்துவக் கல்வி இயக்குநர் எஸ்.கீதாலட்சுமி வலியுறுத்தினார்.
     தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவப் படிப்பை முடித்த மாணவர்களுக்கு முதலாவது பட்டமளிப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.
     மருத்துவக் கல்லூரி கூட்டரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மருத்துவர்களுக்கு பட்டமளித்து மருத்துக் கல்வி இயக்குநர் எஸ்.கீதாலட்சுமி பேசியது:
     மருத்துவர்கள் நோயாளிகளிடம் அன்பாக பழக வேண்டும். அவர்களுடைய நோய்கள் குறித்து அறிந்து அதற்கு உகந்த மருத்துவத்தை அளிக்க வேண்டும்.
     நோயாளிகள் மட்டுமன்றி அவர்களது குடும்பத்தினருடன் மருத்துவர்கள் உறவுகளை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
     தற்போது, படிப்பு முடித்து பயிற்சி பெறும் காலத்தை முழுமையாகப் பயன்படுத்தி தங்களது அனுபவங்களை வளர்த்துக் கொள்ள வேண்டும். சமுதாயம் போற்றும் வகையில் மருத்துவர்கள் கண்ணியத்துடன் நடந்து கொள்ள வேண்டும். மேலும், தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரியிலிருந்து மருத்துவர்களாக வெளியேறும் மாணவர்கள் தருமபுரிக்கு பெருமை சேர்க்க வேண்டும் என்றார் அவர்.
     விழாவில், மருத்துவக் கல்லூரி முதல்வர் ராஜா பில்லி கிரஹாம் பேசியது:
     மருத்துவர்கள் வணிக நோக்கமின்றி மனித நேயத்துடன் நடந்து கொள்ள வேண்டும். நோயாளிகளிடம் நோயின் உண்மை தன்மையை எடுத்துக் கூறி சிகிச்சை அளிக்க வேண்டும். நேரத்தைக் கடைப்பிடித்து தங்கள் உடல் நலனில் அக்கறை கொண்டு, மருத்துவ சேவையாற்ற வேண்டும். மேலும், மருத்துவர்கள் தங்களது வாழ்வில் ஒழுக்கத்தைக் கடைப்பிடித்து பெற்றோருக்கும், சமுதாயத்துக்கும் பெருமை சேர்க்க வேண்டும் என்றார் அவர்.
     விழாவில், உறைவிட மருத்துவர் ஆர்.சுரபி, மருத்துவக் கண்காணிப்பாளர் எம்.சிவக்குமார், துணைக் கண்காணிப்பாளர் இளங்கோவன், மகப்பேறு மருத்துவர் கண்மணி, மருத்துவர் கோவிந்தராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
     முதல் பட்டமளிப்பு விழா: தருமபுரி மருத்துவக் கல்லூரி கடந்த 2008-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்தக் கல்லூரியில் எம்பிபிஎஸ் படிப்பில் சேர்ந்து தங்களது படிப்பு, பயிற்சியை முடித்து தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகள் 87 பேருக்கு பட்டம் வழங்கும் முதல் பட்டமளிப்பு விழா என்பது குறிப்பிடத்தக்கது.
     விழாவில், பட்டம் பெற்ற மாணவ, மாணவிகள் முழுமை பெற்ற மருத்துவர்களுக்கான உறுதிமொழியை மருத்துவக் கல்வி இயக்குநர் கீதாலட்சுமி வாசிக்க, அனைவரும் உறுதியேற்றனர்.
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai