Enable Javscript for better performance
பத்தாம் வகுப்பு தேர்வு தொடக்கம்:  முறைகேடுகளைத் தடுக்க சிறப்பு ஏற்பாடுகள்- Dinamani

சுடச்சுட

    

    பத்தாம் வகுப்பு தேர்வு தொடக்கம்:  முறைகேடுகளைத் தடுக்க சிறப்பு ஏற்பாடுகள்

    By  தருமபுரி/ கிருஷ்ணகிரி,  |   Published on : 27th March 2014 09:43 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் முறைகேடுகளைத் தடுக்க சிறப்பு
     ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளன.
     தமிழகம் முழுவதிலும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் புதன்கிழமை (மார்ச் 26) தொடங்கி ஏப்ரல் 9ஆம் தேதி வரை நடைபெறுகின்றன.
     தருமபுரி மாவட்டத்தில் 285 அரசு, உதவி பெறும், மெட்ரிக் பள்ளிகளில் பயிலும் 25,893 மாணவர்கள், தனித் தேர்வர்கள் 2,097 பேர் தேர்வு எழுதினர்.
     தருமபுரி அதியமான்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற தேர்வுப் பணியை மாவட்ட ஆட்சியர் கே.விவேகானந்தன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின் போது பள்ளி கல்வித் துறை இணை இயக்குநர் வி.பாலமுருகன் உடனிருந்தார்.
     தமிழ் முதல்தாள் கேள்விகள் எளிதாக இருந்ததாக தேர்வெழுதி வெளியே வந்த மாணவர்கள் கூறினர். டிஸ்லெக்சியாவில் பாதிக்கப்பட்டு தேர்வெழுதிய 50 மாணவர்களுக்கு தேர்வு எழுத கூடுதலாக ஒரு மணி நேரம் அளிக்கப்பட்டது.
     கிருஷ்ணகிரியில்
     கிருஷ்ணகிரி வருவாய் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை 28,436 மாணவ, மாணவிகள் எழுதினர்.
     கிருஷ்ணகிரி கல்வி மாவட்டத்தில் 37 தேர்வு மையங்களில் 15,229 மாணவ, மாணவிகளும், ஓசூர் கல்வி மாவட்டத்தில் 29 தேர்வு மையங்களில் 13,297 பேரும் என மொத்தம் 66 மையங்களில் 28,436 பேர் தேர்வு எழுதினர். இதில் மாற்றுத்திறனாளிகள் தேர்வு எழுதுவதற்காக 37 ஆசிரியர்களும், 8 மாணவர்களுக்கு கூடுதல் நேரமும் ஒதுக்கப்பட்டுள்ளது.
     கிருஷ்ணகிரியில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி ஆகிய தேர்வு மையங்களை மாவட்ட ஆட்சியர் டி.பி.ராஜேஷ் பார்வையிட்டார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai