Enable Javscript for better performance
மணல் கடத்தல்:  ரூ.20 ஆயிரம் அபராதம்- Dinamani

சுடச்சுட

    

    அரூர் அருகே மணல் கடத்தியவருக்கு ரூ.20 ஆயிரம் புதன்கிழமை அபராதம் விதிக்கப்பட்டது.
     அரூர் வட்டம், வேடகட்டமடுவு காப்புக்காட்டில் தென்பெண்ணையாறு பகுதியில் தீர்த்தமலை வனச்சரகர் ஆர்.வீரபத்திரன் தலைமையில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர்.
     அப்போது டிராக்டரில் மணல் கடத்திய நபரை விசாரணை செய்ததில் அவர் மாம்பட்டியைச் சேர்ந்த சீனு (35) என்பது தெரிய வந்தது. மணல் கடத்திய குற்றத்துக்காக அவருக்கு ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்து மாவட்ட வன அலுவலர் (அரூர்) எஸ்.ராமசுப்பிரமணியன் உத்தரவிட்டார்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai