Enable Javscript for better performance
வாகன  சோதனையில்  ரூ.3.20 லட்சம் பறிமுதல்- Dinamani

சுடச்சுட

    

    பென்னாகரத்தில் உரிய ஆவணமின்றி எடுத்து வரப்பட்ட ரூ.3.20 லட்சத்தை பறக்கும் படையினர் புதன்கிழமை பறிமுதல் செய்தனர்.
     பென்னாகரம் துணை வட்டாட்சியர் ராமலிங்கம் தலைமையிலான பறக்கும் படையினர் அங்குள்ள கூட்டு சாலையில் புதன்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர். அந்த வழியாக இரண்டு சக்கர வாகனத்தில் வந்த தனியார் ஒப்பந்ததாரர் சண்முகத்திடம் சோதனையிடப்பட்டது.
     அதில் உரிய ஆவணமின்றி எடுத்து வரப்பட்ட ரூ.3.20 லட்சம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai