பரிசல் ஓட்டிகள் சங்கம் தொடக்க விழா
By தருமபுரி | Published On : 29th September 2014 03:40 AM | Last Updated : 29th September 2014 03:40 AM | அ+அ அ- |

ஒகேனக்கல் பரிசல் ஓட்டி சங்கம், மீனவர்கள் சங்கம் துவக்கவிழாவும் சனிக்கிழமை நடைபெற்றது.
சங்க நிர்வாகி ஜே.முத்து தலைமை வகித்தார். அரூர் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினர் பி.டில்லிபாபு பரிசல் ஓட்டிகள் சங்க கொடியேற்றிவைத்து பேசினார்.
சேலம் மாவட்டம், நங்கவள்ளி ஒன்றியக் குழுத் தலைவர் ஜீவானந்தம், ஒகேனக்கல் மீனவர்கள் சங்க பெயர் பலகையை திறந்துவைத்து பேசினார்.
இந்த நிகழ்ச்சியில், தமிழ்நாடு விசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் எம்.ஆறுமுகம், மாவட்டச் செயலாளர் கே.என்.மல்லையன் உள்ளிட்டோர் பேசினர்.
இதில், பரிசல் ஓட்டும் தொழிலாளர்களுக்கு மழை மற்றும் வெயில் காலங்களில் ஓய்வெடுக்க ஓய்வு அறை அரசு கட்டித் தரவேண்டும். தொழிலாளர்கள் பரிசல்களை நிறுத்துவதற்க்கு ஆற்று ஓரத்தில் இடம் ஒதுக்கித்தர வேண்டும். வெள்ளப் பெருக்கு உள்ளிட்ட பரிசல் ஓட்ட தடை விதிக்கப்படுகிற காலங்களில் பரிசல் ஓட்டிகளுக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும். சுற்றுலாப் பயனிகள் நலன் கருதி அருவியின் ஓரம் வனத்துறையினர் கம்பிவேலி அமைக்கவேண்டும். மீனவர்கள் காவிரி ஆற்றில் மீன் பிடிக்க வனத்துறையினர் மிரட்டும் போக்கை கைவிடவேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
வட்டத் தலைவர், கே.அன்பு வட்டச் செயலாளர் எம்.குமார், என்.மாரிமுத்து, ராமு, முருகானந்தம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.