Enable Javscript for better performance
இந்தியன் வங்கி சார்பில் இளைஞர்களுக்கு சுய தொழில் பயிற்சி- Dinamani

சுடச்சுட

    

    இந்தியன் வங்கி சார்பில் இளைஞர்களுக்கு சுய தொழில் பயிற்சி

    By தருமபுரி  |   Published on : 17th April 2015 05:11 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    இந்தியன் வங்கி சார்பில் தருமபுரியில் இளைஞர்களுக்கு சுய தொழில் பயிற்சி இலவசமாக அளிக்கப்படவுள்ளது.

    இதுகுறித்து, இந்தியன் வங்கி மண்டல மேலாளர் கோபிகிருஷ்ணன் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: மத்திய அரசின் ஊரக வளர்ச்சித் துறை மேற்பார்வையில் தமிழக அரசின் உதவியுடன் தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இந்தியன் வங்கி சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த மையம் சார்பில், மடிக்கணினி பழுதுபார்த்தல் பயிற்சி வழங்கப்பட உள்ளது.

    இந்த பயிற்சிக்கு 10-ஆம் வகுப்பு படித்து இருக்க வேண்டும். சுய உதவிக் குழுக்கள் மற்றும் வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். பயிற்சிக்கு கட்டணம் கிடையாது. மதிய உணவு வழங்கப்படும். அதேபோல, காளான் வளர்ப்பு பயிற்சியும் வழங்கப்பட உள்ளது. பயிற்சியில் சேர விருப்பம் உள்ளவர்கள் தங்களது பெயர், முகவரி, தொலைபேசி எண் உள்ளிட்ட விவரங்களுடன் வரும் 30-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு வேலைவாய்ப்புப் பயிற்சி மையத்தை நேரடியாகவோ அல்லது 04342-230511,

    94422-74912 என்ற எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம் என்றார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai