Enable Javscript for better performance
சாலை மறியல்: 150 பேர் மீது வழக்குப் பதிவு- Dinamani

சுடச்சுட

    

    அரூரை அடுத்த ஜடையம்பட்டியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதாக 150 பேர் மீது போலீஸார் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்தனர்.

    மொரப்பூர் அருகே ஜடையம்பட்டி பகுதி அரசுப் பள்ளியில் 9-ஆம் வகுப்பு படிக்கும் மாணவியை 6 பேர் கொண்ட கும்பல் பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கைது செய்யப்பட்டனர்.

    இவர்களைக் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யக் கோரி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர், போளையம்பள்ளி, ஜடையம்பட்டி, மாரப்பநாய்க்கன்பட்டி உள்ளிட்ட கிராமப் பகுதிகளைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் அரூர் - தருமபுரி சாலை ஜடையம்பட்டியில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    போராட்டத்தில் ஈடுபட்டோரிடம் அரூர் காவல் துணைக் கண்காணிப்பாளர் எஸ்.தட்சிணாமூர்த்தி, வட்டாட்சியர் பொன்.தமிழ்ச்செல்வி உள்ளிட்ட அரசு அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    இதனையடுத்து மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. சாலை மறியல் போரட்டம் காரணமாக அரூர் - தருமபுரி சாலையில் சுமார் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இதுகுறித்து போளையம்பள்ளி கிராம நிர்வாக அலுவலர் ஜி.ராமமூர்த்தி கம்பைநல்லூர் காவல் நிலையத்தில் புகார் செய்ததன் பேரில், வி.சி கட்சியின் இளம் சிறுத்தைகள் எழுச்சிப் பாசறையின் மாநில துணைச் செயலர் பொ.மு.நந்தன், கட்சி நிர்வாகிகள் குண்டு சக்தி, மின்னல் சக்தி உள்ளிட்ட 150 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai