Enable Javscript for better performance
மின் கட்டண உயர்வை கைவிடக் கோரி மனிதச் சங்கிலி- Dinamani

சுடச்சுட

    

    மின் கட்டண உயர்வை கைவிடக் கோரி மனிதச் சங்கிலி

    By தருமபுரி,  |   Published on : 17th April 2015 05:11 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மின் கட்டண உயர்வை கைவிடக் கோரி தமிழ்நாடு மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பு சார்பில் தருமபுரி தொலைத்தொடர்பு அலுவலகம் முன் வியாக்கிழமை மனிதச் சங்கிலி போராட்டம் நடைபெற்றது .

    மாவட்டத் தலைவர் ஆர்.சுந்தரமூர்த்தி தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் ஜி.பி.விஜயன், பொருளாளர் சின்னசாமி, சி.ஐ.டி.யூ. மாவட்டச் செயலர் சி.நாகராஜன், மின் ஊழியர் சங்க மாவட்டச் செயலர் பி.துரை ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர்.

    மின் உற்பத்திச் சாதனங்களின் முழுத் திறனைப் பயன்படுத்தி மின் உற்பத்தியைப் பெருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். உள்நாட்டில் உற்பத்தியாகும் நிலக்கரியைப் பயன்படுத்தி தொழில்நுட்ப உதவியுடன் மின் உற்பத்தியைப் பெருக்க வேண்டும். அரசின் சமூக கொள்கைகளுக்காக வழங்கப்படும் இலவச மின்சாரத்துக்கான முழுத் தொகையையும் மானியமாக வழங்க வேண்டும்.

    மின் வாரியத்தில் காலியாக உள்ள 40 ஆயிரம் பணியிடங்களை நிரப்பிட வேண்டும். ஒப்பந்த முறையை ரத்து செய்ய வேண்டும். அதிகவிலை கொடுத்து தனியாரிடம் மின்சாரம் கொள்முதல் செய்யும் ஒப்பந்தங்களை ரத்துசெய்ய வேண்டும். மின் வாரியம் பொதுத்துறையாகவே நீடிக்க வேண்டும். நியாயமான கட்டணத்தில் மின்சாரம் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தப்பட்டன.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai