சுடச்சுட

  

  தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டியில் வருகிற டிச.11-ஆம் தேதி திருந்திய நெல் சாகுபடி தொழில்நுட்பம் குறித்து பயிற்சி வழங்கப்பட உள்ளது.

  இது குறித்து பாப்பாரப்பட்டி வேளாண் அறிவியல் நிலையம் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தருமபுரி மாவட்டத்தில் கடந்த காலங்களில் பருவமழை போதிய அளவு பொழியாததால் நெல் சாகுபடி பரப்பளவு குறைந்தது.

  இந்த நிலையில், தற்போது மாவட்டத்தில் அதிக அளவு மழை பெய்துள்ளதால் நெல் சாகுபடியில் விவசாயிகள் தீவிரம் காட்டி வருகின்றனர். இதனால், சாகுபடி பரப்பளவு நிகழாண்டு அதிகரிக்கும் வாய்ப்புள்ளது.

  இதில், திருந்திய நெல் சாகுபடியில் பூச்சி தாக்குதலின்றி, ரசாயனம் கலந்த மருந்துகளை பயன்படுத்தாமல், மேற்கொள்ள வேண்டிய தொழில்நுட்பம் குறித்து பயிற்சி வருகிற டிச.11-ஆம் தேதி அளிக்கப்பட உள்ளது.

  எனவே, மாவட்ட விவசாயிகள் இந்த பயிற்சி முகாமில் பங்கேற்ற பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. பயிற்சியில் கலந்துகொள்ள 04342-245860.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai