Enable Javscript for better performance
பேரவைத் தேர்தலில் அ.தி.மு.க., தி.மு.க.விற்கு மாற்றாக பா.ம.க. இருக்கும்:  அன்புமணி ராமதாஸ்- Dinamani

சுடச்சுட

    

    பேரவைத் தேர்தலில் அ.தி.மு.க., தி.மு.க.விற்கு மாற்றாக பா.ம.க. இருக்கும்:  அன்புமணி ராமதாஸ்

    By  அரூர்,  |   Published on : 28th January 2015 02:13 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    2016-இல் நடைபெறும் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அ.தி.மு.க., தி.மு.க.வுக்கு மாற்றாக பா.ம.க. இருக்கும் என தருமபுரி தொகுதி மக்களவை உறுப்பினரும், பா.ம.க. இளைஞரணித் தலைவருமான அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.
     தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி சட்டப்பேரவைத் தொகுதியில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்ததுடன், கிராம மக்களிடம் நேரில் குறைகேட்பு முகாமில் அன்புமணி ராமதாஸ் செவ்வாய்க்கிழமை பங்கேற்றுப் பேசியது:
     தமிழகத்தில் அ.தி.மு.க., தி.மு.க. ஆகிய திராவிடக் கட்சிகள் மாறி மாறி ஆட்சிக்கு வருகின்றன. அந்தக் கட்சிகளால் மக்களுக்கு எந்த நன்மையும் இல்லை. தமிழக மக்கள் டாஸ்மாக் மதுவுக்கு அடிமையானது தான் மிச்சம். மதுக் கடையில் பல்லாயிரம் கோடி ரூபாய் பணத்தை மக்கள் செலவு செய்கின்றனர். இதனால், பெண்களின் பொருளாதாரம் முற்றிலும் சிதைகிறது. பெற்றோர் குடிப்பதைப் பார்க்கும் சிறுவர்கள் கூட தற்போது மது குடிக்கும் பழக்கத்துக்கு மாறியுள்ளனர்.
     தமிழகத்தில் பா.ம.க. ஆட்சிக்கு வந்தால் டாஸ்மாக் மதுக் கடைகள் மூடப்படும். இலவசங்கள் அனைத்தும் ரத்து செய்யப்படும். தரமான கல்வி, விவசாயம், சுகாதார வசதிகள் இலவசமாக வழங்கப்படும்.
     டாஸ்மாக் மதுக் கடைகளை மூடக் கோரி மார்ச் 31-ஆம் தேதி தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே போராட்டம் நடைபெற உள்ளது. இதில் பெண்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும். தமிழகத்தில் 2016-இல் நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தலில் அ.தி.மு.க., தி.மு.க.-வுக்கு மாற்று சக்தியாக பா.ம.க. உருவெடுக்கும்.
     தருமபுரி மாவட்டத்தில் அனைத்து கிராமங்களுக்கும் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தில் குடிநீர் வழங்க வேண்டும். இந்த மாவட்டத்தில் புதிய தொழில் சாலைகளை தமிழக அரசு உருவாக்கி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்க வேண்டும் என்றார்.
     பாப்பிரெட்டிப்பட்டி சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட அ.பள்ளிப்பட்டி, அதிகாரப்பட்டி, கவுண்டம்பட்டி, மெணசி, ஹெச்.புதுப்பட்டி, பட்டவர்த்தி, கோபாலபுரம், கள்ளியூர், மருக்காலம்பட்டி, அம்மாபாளையம் உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்ட கிராமங்களில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தும், பொதுமக்களிடம் குறைகளையும் அன்புமணி ராமதாஸ் கேட்டறிந்தார்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai