Enable Javscript for better performance
மின் கட்டண உயர்வை திரும்பப் பெறக் கோரி  விசைத்தறி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்- Dinamani

சுடச்சுட

    

    மின் கட்டண உயர்வை திரும்பப் பெறக் கோரி  விசைத்தறி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

    By  தருமபுரி,  |   Published on : 28th January 2015 02:14 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மின் கட்டண உயர்வைத் திரும்பப் பெற வலியுறுத்தி, தருமபுரி மாவட்ட சி.ஐ.டி.யூ. விசைத்தறி தொழிலாளர் சங்கம் சார்பில், செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
     தருமபுரி மின் வாரிய அலுவலக முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்டத் தலைவர் வி.பி.சாமிநாதன் தலைமை வகித்தார். மாநில துணைத் தலைவர் கோபிகுமார், சி.ஐ.டி.யூ. தொழில்சங்க மாவட்டத் தலைவர் பி.ஆறுமுகம் ஆகியோர் கோரிக்கைகள் குறித்து பேசினர்.
     இதில், தருமபுரி மாவட்டத்தில் வசிக்கும் மக்கள், வேலை தேடி வெளி மாவட்டங்களுக்கு குடிபெயர்வதைத் தடுக்க சிப்காட் தொழில்பேட்டை திட்டத்தை விரைந்து அமல்படுத்த வேண்டும்.
     உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தை திரும்பப் பெற
     வேண்டும்.
     விசைத்தறி தொழில் தடையின்றி இயங்க சீரான மின் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இதில், சங்க நிர்வாகிகள் பி.ராமமூர்த்தி, ஏ.வி.ஆர். தவப்புதல்வன், பரதன், திலகவதி சுபாஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
     
     
     
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai