Enable Javscript for better performance
வாகனத் தணிக்கை:  540 பேர் மீது வழக்கு- Dinamani

சுடச்சுட

    

    தருமபுரி மாவட்டத்தில், திங்கள்கிழமை நடைபெற்ற வாகனத் தணிக்கையில் விதிமுறைகளை மீறியதாக 540 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
     தருமபுரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஜெ.லோகநாதன், குடியரசு தின விழாவையொட்டி, மாவட்டம் முழுவதும் வாகனத் சோதனை நடத்த போலீஸாருக்கு உத்தரவிட்டார்.
     இதையடுத்து, மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட பகுதிகளிலும், காலை முதல் இரவு வரை வாகனத் தணிக்கையில் போலீஸார் ஈடுபட்டனர்.
     அப்போது, மது அருந்தி வாகனம் ஓட்டியது, விதிமுறைகளை மீறி வாகனம் ஓட்டியது, உரிமம், உரிய ஆவணங்கள் இன்றி இரு சக்கர வாகனங்களை ஓட்டியது என தருமபுரி காவல் உள் கோட்டத்தில் 192 பேர், அரூர் உள்கோட்டத்தில் 179 பேர், பென்னாகரம் உள்கோட்டத்தில் 169 பேர் என மாவட்டம் முழுவதும் மொத்தம் 540 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai