Enable Javscript for better performance
அரூரில் அம்பேத்கர் பிறந்த நாள் விழா- Dinamani

சுடச்சுட

    

    அரூரில் டாக்டர் அம்பேத்கரின் 125-வது பிறந்த நாள் விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.

     அரூர் கச்சேரிமேடு சாலை சந்திப்பில் உள்ள அம்பேத்கரின் திருவுருவச் சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சியினர், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

     காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எச்.கே.ராஜா, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தருமபுரி கிழக்கு மாவட்டச் செயலர் ஜானகிராமன், தமிழக பழங்குடி மக்கள் இயக்க மாநிலத் தலைவர் கொ.வேடியப்பன், இந்திய குடியரசுக் கட்சி மாநில பொதுச்செயலர் தா.க.முருகன், மாநில செயல் தலைவர் பி.வி.கே மணிமாறன், சமூக சமத்துவப்படை மாவட்டத் தலைவர் புத்தமணி சாக்ரடீஸ், அம்பேத்கர் கல்வி மற்றும் கொடை அறக்கட்டளையின் தலைவர் வி.எஸ்.குமேரசன், இந்தியா பசுமை விடுதலை கட்சியின் நிறுவனத் தலைவர் சீனிவாசன், தேசிய மக்கள் கட்சியின் நிறுவனர் அ.இனமுரசு கோபால், அரசு ஊழியர் ஐக்கியப் பேரவையின் மாவட்டத் தலைவர் சிவராமன், சென்னமூர்த்தி, அரூர் எம்எல்ஏ பி.டில்லிபாபு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலர் ஏ.குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

    ரத்ததானம்: அம்பேத்கரின் பிறந்த நாளை முன்னிட்டு அரூர் அம்பேத்கர் நகரில் யாசட் இளைஞர் சங்கம் சார்பில் இளைஞர்கள் 125 பேர் ரத்ததானம் செய்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai