Enable Javscript for better performance
தமிழ்ப் புத்தாண்டு: ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்: தேனீக்கள் கொட்டி 15 பேர் காயம்- Dinamani

சுடச்சுட

    

    தமிழ்ப் புத்தாண்டு: ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்: தேனீக்கள் கொட்டி 15 பேர் காயம்

    By தருமபுரி  |   Published on : 15th April 2016 06:09 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தமிழ் புத்தாண்டையொட்டி ஒகேனக்கல்லில் சுற்றுலாப் பயணிகள் ஏராளமானோர் குவிந்தனர். பிரதான அருவிக்கு அருகே திடீரென தேனீக்கள் கொட்டியதில்  15-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

     தமிழ் புத்தாண்டு விடுமுறை நாளையொட்டி தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு சுற்றுலாப் பயணிகள் ஏராளமானோர் வந்திருந்தனர். தமிழகம் மட்டுமல்லாது கேரளம், கர்நாடகம், ஆந்திர மாநிலங்களில் இருந்து சுமார் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் குவிந்திருந்தனர்.

      இதனால் ஒகேனக்கல் சுற்றுலாத்தலம் வழக்கத்துக்கு மாறாக பரபரப்புடன் காணப்பட்டது. எண்ணெய் மசாஜ் பகுதியிலும் மீன் சமையல் நடைபெறும் பகுதியிலும் கூட்டம் அதிகமாக இருந்தது.

      இதற்கிடையில் காலை சுமார் 9 மணியளவில் பிரதான அருவிப் பகுதியில் இருந்த சுற்றுலாப் பயணிகள் மற்றும் உள்ளூர் தொழிலாளர்களை திடீரென தேனீக்கள் கொட்டின.  அருவிக்கு அருகே வளர்ந்துள்ள பிரமாண்ட மரங்கள் சிலவற்றின் உச்சிப் பகுதியில் தேன் கூடுகள் உள்ளன. இதில் ஒரு தேன்கூட்டில் இருந்து கிளம்பிய தேனீக்கள் அப்பகுதியில் இருந்தவர்களைக் கொட்டத் தொடங்கின.

      இதில், உள்ளூர் தொழிலாளர்களான ராமர், மாதப்பன், சக்திவேல், திருமலை, சந்திரன் மற்றும் சமையல் தொழிலாளர்களான 2 பெண்கள், கேரளத்தைச் சேர்ந்த 8 பேர் ஆகியோரை தேனீக்கள் கொட்டின. இதையறிந்த மற்ற சுற்றுலாப் பயணிகள் பரபரப்புடன் வேறு இடங்களுக்கு நகர்ந்தனர்.

      தேனீக்கள் கொட்டி காயமடைந்தவர்கள் ஒகேனக்கல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்றுச் சென்றனர்.

      சமைக்கும் பகுதியில் இருந்து கிளம்பிய புகையாலோ அல்லது குரங்குகளின் சேட்டையாலோ தேனீக்கள் கூடுகளில் இருந்து கிளம்பி வந்து அங்கிருந்தவர்களை கொட்டியிருக்கலாம் என்று அப்பகுதியினர் தெரிவித்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai