Enable Javscript for better performance
தருமபுரியில் அம்பேத்கர் பிறந்த நாள் விழா- Dinamani

சுடச்சுட

    

    சட்டமேதை அண்ணல் அம்பேத்கரின் 125-ஆவது பிறந்த நாளையொட்டி தருமபுரி அரசு மருத்துவமனை அருகே உள்ள அவரது சிலைக்கு அதிமுக, தேமுதிக-மக்கள் நலக் கூட்டணி மற்றும் பல்வேறு அமைப்புகளின் சார்பில் வியாழக்கிழமை, மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

      அதிமுக மாவட்டச் செயலரும் பாலக்கோடு வேட்பாளருமான கே.பி. அன்பழகன் தலைமையில் தருமபுரி வேட்பாளர் பு.தா. இளங்கோவன், முன்னாள் மாவட்டச் செயலர் பூக்கடை முனுசாமி, எம்ஜிஆர் மன்றச் செயலர் டி.கே. ராஜேந்திரன் உள்ளிட்ட ஏராளமான அதிமுகவினர் மாலை அணிவித்தனர்.

      தேமுதிக- மக்கள் நலக் கூட்டணி சார்பில், தேமுதிக மாவட்டச் செயலர் டாக்டர் இளங்கோவன், துணைச் செயலர் பாஸ்கர் எம்எல்ஏ, பொருளாளர் வழக்குரைஞர் காவேரி வர்மன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் எம். மாரிமுத்து, நகரச் செயலர் ஜி. லெனின், மதிமுக மாவட்டச் செயலர் அ. தங்கராஜ், நகரச் செயலர் வஜ்ரவேல், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலர் எஸ். தேவராசன்,  விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மண்டலச் செயலாளர் பொ.மு. நந்தன், மாவட்டச் செயலர் த. ஜெயந்தி, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டச் செயலர் வழக்குரைஞர் டி. மாதையன் உள்ளிட்டோர் மாலை அணிவித்தனர்.

      திராவிடர் கழகத்தின் சார்பில் மாவட்டத் தலைவர் இரா. வேட்ராயன், மாநில அமைப்புச் செயலர் ஊமை ஜெயராமன், மண்டலச் செயலர் கரு. பாலன் ஆகியோரும், எஸ்சி., எஸ்டி அலுவலர் நலச் சங்கத்தின் நிர்வாகிகள் கிருஷ்ணன், முருகன், அமரவேல் ஆகியோரும், அம்பேத்கர் அறக்கட்டளை சார்பில் தன்ராஜ், சுப்பிரமணி, கண்ணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

      ஆதித் தமிழர் பேரவை சார்பில் மாநிலத் துணைப் பொதுச் செயலர் சந்திரன், மாவட்டச் செயலர் தமிழழகன் ஆகியோரும், புதிய தமிழகம் கட்சி சார்பில் மாவட்டச் செயலர் இளையராஜா, தலித் விடுதலைக் கட்சி சார்பில் மாவட்டச் செயலர் மாணிக்கம், ஆதிதிராவிடர் சங்கத்தின் பொதுச் செயலர் செல்வராஜ், மாவட்டச் செயலர் கே.சி. அம்பேத்கர் உள்ளிட்டோரும் மாலை அணிவித்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai