Enable Javscript for better performance
பையர்நத்தத்தில் குப்பைகளை அகற்ற வலியுறுத்தல்- Dinamani

சுடச்சுட

    

    பாப்பிரெட்டிப்பட்டி அருகேயுள்ள பையர்நத்தம் கிராமத்தில் குவிந்துள்ள குப்பைகளை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினர்.

     பாப்பிரெட்டிப்பட்டி ஊராட்சி ஒன்றியம், பையர்நத்தம் கிராமத்தில் 1500-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்தக் குடியிருப்புப் பகுதியில் சேகரிப்படும் குப்பைகள் அந்த ஊரின் மயானப்பகுதியில் கொட்டப்படுகின்றன. தற்போது இந்த மயானத்தில் சுமார் 10 டன் குப்பைகள் குவிந்துள்ளன.

     இங்குள்ள குப்பைகளுக்கு அடிக்கடி தீ வைக்கப்படுகிறது. இந்த மயானத்தின் எதிரில் பையர்நத்தம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. குப்பைகளுக்கு தீ வைக்கப்படுவதால் அதிலிருந்து வெளியேறும் புகையால் நோயாளிகள் கடுமையாகப் பாதிக்கின்றனர். இதேபோல் மயானத்தில் சடலங்கள் எரியூட்டப்படுவதால் துர்நாற்றம் வீசுவதாக பொதுமக்கள் புகார் கூறுகின்றனர்.

     எனவே, பையர்நத்தம் கிராமத்தில் சேகரிக்கப்படும் குப்பைகளை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் எதிரே கொட்டுவதைக் கைவிடவேண்டும். குப்பைகளுக்குத் தீ வைக்கும் மர்ம நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் நீண்டநாள் எதிர்பார்ப்பு.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai