Enable Javscript for better performance
அரூர் பெத்தபெல்லகுட்டை ஏரி ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தல்- Dinamani

சுடச்சுட

    

    அரூர் பெத்தபெல்லகுட்டை ஏரி ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தல்

    By DIN  |   Published on : 01st November 2016 08:10 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தருமபுரி மாவட்டம், அரூரிலுள்ள பெத்தபெல்லகுட்டை ஏரியை ஆக்கிரமித்துள்ளவர்கள் மீது நடவடிக்கை எடுத்து, ஏரியை மீட்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கே. விவேகானந்தனிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
    அப்பகுதியைச் சேர்ந்த சமூகச் செயற்பாட்டாளர் கொ. வேடியப்பன், திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைகேட்பு நாள் கூட்டத்தில் அளித்த மனு விவரம்:
    அரூர் கிராம புல எண்: 328-இல் 10 ஏக்கர் பரப்பளவில் இருந்த பெத்தபெல்லகுட்டை ஏரி தற்போது முழுவதும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு ஏரி இருந்ததற்கான சுவடே இல்லாமல் இருக்கிறது. ஏரியின் பெரும்பகுதியை அரசியல் செல்வாக்கு மிக்க சிலர் முறைகேடாக பட்டா வாங்கியுள்ளதாகவும் தெரிகிறது.
    ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி பல முறை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு மனு அளித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே மாவட்ட ஆட்சியர் தலையிட்டு ஏரியை ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்டு முழுமையாக தூர்வாரி பழையபடி பாசனத்துக்கான நீர்நிலையாக மாற்ற வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai