Enable Javscript for better performance
அரூர் பேருந்து நிலையத்துக்கு பேருந்துகள் வந்து செல்ல வலியுறுத்தல்- Dinamani

சுடச்சுட

    

    அரூர் பேருந்து நிலையத்துக்கு பேருந்துகள் வந்து செல்ல வலியுறுத்தல்

    By DIN  |   Published on : 01st November 2016 08:09 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அரூர் வழியாகச் செல்லும் அனைத்து அரசுப் பேருந்துகளும் பேருந்து நிலையத்துக்கு வந்து செல்ல வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினர்.
    சேலம் - திருப்பத்தூர் நெடுஞ்சாலையில் அரூர் வழியாக நாள்தோறும்  நூற்றுக்கணக்கான பேருந்துகள் வந்து செல்கின்றன. சென்னை, வேலூர், திருப்பதி, கோவை, ஈரோடு, திருவண்ணாமலை, மதுரை, பழனி உள்ளிட்ட தொலைதூரப் பகுதிகளுக்கு செல்லும் அரசுப் பேருந்துகள் அரூர் பிரதான சாலை வழியாகச் சென்று விடுகின்றன.  
    இதனால் இரவு நேரங்களில் பிரதான சாலையில் இருந்து சுமார் ஒரு கி.மீ. தூரத்தில் உள்ள பேருந்து நிலையத்துக்கு பயணிகள் நடந்து செல்ல வேண்டிய நிலையுள்ளது. இதனால் பெண்கள், முதியவர்கள் பாதிக்கப்படுகின்றனர். அரூர் நகரில் சாலையோரங்களில் போதிய அளவில் மின் விளக்குகள் இல்லாத நிலையில் திருட்டு, வழிப்பறி உள்ளிட்ட சம்பவங்கள் நடைபெறுகின்றன.  எனவே அரூர் வழியாகச் செல்லும் அனைத்து அரசுப் பேருந்துகளும் பேருந்து நிலையத்துக்குள் வந்து செல்ல போக்குவரத்துத் துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்ப்பு தெரிவித்துள்ளனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai