சுடச்சுட

  

  தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி அருகே பாடி கிராமத்தில் இரு குடிசைகள் தீப்பற்றி எரிந்ததில் ஆடு, கோழிகள் கருகி உயிரிழந்தன.
  பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் மல்லிகா (50). இவர் அங்குள்ள 2 குடிசை வீடுகளில் ஒரு வீட்டில் வசித்து வந்தார். மற்றொரு, வீட்டில் ஆடு, கோழி, நாய் ஆகியவற்றைக் கட்டி வைத்திருந்தார்.
  இந்த நிலையில், அப்பகுதியில் குவிக்கப்பட்டிருந்த குப்பைக்கு திங்கள்கிழமை தீ வைக்கப்பட்டது. காற்று மூலம் மல்லிகாவின் குடிசை வீட்டின் மீது தீப்பொறி பறந்து விழுந்துள்ளது. இதைத் தொடர்ந்து, 2 குடிசை வீடுகளும் தீப்பற்றி எரியத் தொடங்கின.
  இதுகுறித்து, தகவல் அறிந்த தருமபுரி தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இருப்பினும், மல்லிகாவின்  இரண்டு வீடுகளும் முற்றிலும் எரிந்து சேதமடைந்தன. மேலும்,  வீட்டில் இருந்த பொருள்கள், ஆடுகள், கோழிகள்  தீயில் கருகி இறந்தன.
  இந்த விபத்து குறித்து, பாப்பாரப்பட்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai