சுடச்சுட

    

    தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைகேட்பு நாள் கூட்டத்தில் பெறப்பட்ட 223 மனுக்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுத்து, அதுகுறித்த விவரங்களை மனுதாரர்களுக்கும் தெரிவிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கே. விவேகானந்தன் அறிவுறுத்தினார்.
    முன்னதாக மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சார்பில் 3 பேருக்கு சக்கர நாற்காலிகள், 5 பேருக்கு கருப்புக் கண்ணாடி மற்றும் மடக்கு ஊன்றுகோல்கள் என 8 பேருக்கு ரூ.18 ஆயிரம் மதிப்பிலான பொருள்கள் வழங்கப்பட்டன.
    கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் அ. சங்கர், தனித் துணை ஆட்சியர்கள் மல்லிகா, வள்ளி, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் முத்தரசு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai