Enable Javscript for better performance
மாட்லாம்பட்டியில் பேருந்துகள் சிறைபிடிப்பு- Dinamani

சுடச்சுட

    

    தருமபுரி மாவட்டம், மாட்லாம்பட்டியில் இரு தனியார் பேருந்துகளை அப்பகுதி பொதுமக்கள் திங்கள்கிழமை பகலில் சிறைபிடித்தனர்.
    கிருஷ்ணகிரி செல்லும் பேருந்துகள் தங்கள் ஊருக்கு வந்து செல்ல வேண்டும் என போக்குவரத்துத் துறையினர் தொடர்ந்து வலியுறுத்தி சுற்றறிக்கைகளை வெளியிட்டு வந்தும்கூட புறவழிச் சாலையிலேயே இறக்கிவிடுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.
    தகவலறிந்து வந்த வருவாய் மற்றும் காவல் துறையினர் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். மாட்லாம்பட்டி வந்து பயணிகளை ஏற்றி, இறக்கிச் செல்ல அறிவுறுத்தப்படும் என அவர்கள் உறுதியளித்ததைத் தொடர்ந்து போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.

     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai