சுடச்சுட

  

  விசைப்பம்பு இயக்குபவர்களுக்கு முறையான ஊதியம் வழங்கக் கோரிக்கை

  By DIN  |   Published on : 01st November 2016 08:10 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  தருமபுரி மாவட்டத்தில் கிராம ஊராட்சிகளில் சொற்ப ஊதியத்தில் பணிபுரிந்து வரும் விசைப் பம்பு இயக்குபவர்கள், துப்புரவுப் பணியாளர்களுக்கு அரசாணையின்படி ஊதியத்தை முறையாக வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.
  தருமபுரி மாவட்ட ஏஐடியூசி ஊராட்சிக் குடிநீர் விசைப்பம்பு இயக்குபவர்கள், துப்புரவுப் பணியாளர் சங்கத்தின் மாவட்டச் செயலர் எம். ராதாகிருஷ்ணன் அளித்த மனு விவரம்:
  கிராம ஊராட்சிகளில் பணிபுரியும் குடிநீர் விசைப் பம்பு இயக்குபவர்கள் மற்றும் துப்புரவுப் பணியாளர்களுக்கு மிகக் குறைவான ஊதியமே நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதையும் முறையாக வழங்குவதில்லை.
  இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியரும் அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதன் மீதும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
  ஆறு மாதங்களுக்கு ஒரு முறை ஊதிய உயர்வு வழங்க வேண்டும். ஆனால், 2014ஆம் ஆண்டுக்குப் பிறகு இதுவரை எவ்வித மாற்றமும் செய்யவில்லை என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
  விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் மாவட்டச் செயலர் ஜெ. பிரதாபன் அளித்த மனுவில், மாவட்டத்தில் ஆதிதிராவிடர்கள் மற்றும் பழங்குடியினருக்கு கட்டித் தரப்பட்ட அன்னை இந்திரா நினைவு குடியிருப்புத் திட்ட வீடுகள் பழுதடைந்துள்ளதால், அவற்றை பழுதுநீக்கி சீரமைத்துத் தர வேண்டும் என கோரப்பட்டுள்ளது.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai