Enable Javscript for better performance
தருமபுரி வழக்குரைஞர்கள் சங்க நிர்வாகிகள் தேர்வு- Dinamani

சுடச்சுட

    

    தருமபுரி வழக்குரைஞர்கள் சங்க புதிய நிர்வாகிகள் செவ்வாய்க்கிழமை தேர்வு செய்யப்பட்டனர்.
    தருமபுரி வழக்குரைஞர்கள் சங்கத்தில் சுமார் 300 - க்கும் மேற்பட்ட வழக்குரைஞர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். இச் சங்கத்துக்கு புதிய நிர்வாகிகள் தேர்வு, தேர்தல் அலுவலர் ஹரிகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது.
    இதில், வழக்குரைஞர்கள் அப்புனுகவுண்டர், இன்பசாகரன் ஆகியோர் தலைவர் பதவிக்குப் போட்டியிட்டனர்.
    வழக்குரைஞர் சங்க அலுவலகத்தில் நடைபெற்ற தேர்தலில் காலை முதல் ஆர்வத்தோடு வழக்குரைஞர்கள் வாக்களித்தனர். இத்தேர்தலில் பதிவான வாக்குகள் மாலையில் எண்ணப்பட்டன.
    இதில், தலைவர் பதவிக்கு போட்டியிட்ட இன்பசாகரன் 120 வாக்குகள் பெற்றார். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட, அப்புனுகவுண்டர் 160 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
    அதேபோல, செயலராக சிவக்குமார், பொருளாளராக சக்திவேல், துணைத் தலைவராக கண்ணதாசன், இணைச் செயலராக முனிராஜ், நூலகராக கோவிந்தராஜ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
    புதிதாகத் தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகளுக்கு சக வழக்குரைஞர்கள் வாழ்த்துத் தெரிவித்தனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai