சுடச்சுட

  

  தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை கோரி பள்ளி முன் திரண்ட பொதுமக்கள்

  By DIN  |   Published on : 02nd November 2016 09:15 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  தருமபுரி அருகே மதுபோதையில் பள்ளிக்கு வந்ததாகக் கூறி, தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, பள்ளி முன் பொதுமக்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
  தருமபுரியை அடுத்த ஆட்டுக்காரம்பட்டியில் அரசு நடுநிலைப் பள்ளி உள்ளது. இப் பள்ளியில்  சுமார் 200 - க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பயின்று வருகின்றனர். 12 ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர்.
  இப் பள்ளியின் தலைமை ஆசிரியராக குணசேகரன் (46) என்பவர் பணியாற்றி வருகிறார். தருமபுரி வெண்ணாம்பட்டியைச் சேர்ந்த இவர், அவ்வப்போது பள்ளிக்கு மதுபோதையில் வருவதாகக் கூறப்படுகிறது.
  இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை பள்ளியில் உள்ள ஓர் அறையில் அவர் மது அருந்தினாராம். இது தொடர்பாக, பள்ளி மாணவியர் அளித்த தகவலின் பேரில், அப்பகுதி பொதுமக்கள் பள்ளியின் முன் திரண்டு தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.இதுகுறித்து, தகவல் அறிந்த உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் நடராஜன், பள்ளிக்கு நேரில் சென்று, பொதுமக்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களிடம் விசாரணை மேற்கொண்டார். இதைத் தொடர்ந்து, பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
  தலைமை ஆசிரியர் மீதான புகார் தொடர்பாக, விசாரணை அறிக்கை கிடைத்த பின்பு, அதனடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் பழனிசாமி கூறினார்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai