சுடச்சுட

  

  தோட்டக்கலைத் துறை மானியங்களைப் பெற விவசாயிகள் பதிவு செய்ய அழைப்பு

  By DIN  |   Published on : 02nd November 2016 03:13 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

   

  தோட்டக்கலைத் துறை மானியங்களைப் பெற விவசாயிகள் மூதுரிமைப் பதிவேட்டில் பதிவு செய்து கொள்ள மாவட்ட ஆட்சியர் கே. விவேகானந்தன் அழைப்பு விடுத்துள்ளார்.
  தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அண்மையில் நடைபெற்ற அனைத்துத் துறை அலுவலர்கள் கூட்டத்தில் அவர் மேலும் பேசியது:
  சொட்டுநீர், தெளிப்பு நீர்ப் பாசனம் அமைக்க சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவிகித மானியம் 5 ஏக்கர் வரை வழங்கப்படுகிறது. பெரு விவசாயிகளுக்கு 75 சதவிகித மானியம் 12.5 ஏக்கர் வரை வழங்கப்படுகிறது.
  இதில் குறிப்பாக 2014 - 15 மற்றும் 2015 - 16ஆம் ஆண்டில் தாழ்த்தப்பட்ட, பழங்குடியின விவசாயிகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் பெரும்பகுதி செலவிடப்படாமல் நிலுவையில் உள்ளது. இந்த நிதியை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
  நடப்பு ஆண்டுக்காக 3,421 ஹெக்டேர் பரப்பில் இத்திட்டத்தைச் செயல்படுத்த ரூ. 23.53 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அனைத்துத் தரப்பு தோட்டக்கலை, வேளாண்மைப் பயிர்களுக்கு வட்டார தோட்டக்கலை அலுவலர் மற்றும் வேளாண் உதவி இயக்குநர் அலுவலகங்களில் விவசாயிகள் தங்களின் ஆவணங்களை அளித்து மானியத்தைப் பெறலாம்.
  தேசிய தோட்டக்கலை இயக்கம் திட்டத்தில் 2016 - 17-ஆம் ஆண்டில் பரப்பு விரிவாக்கம் திட்டம் மூலம் மா, கொய்யா ஒட்டுச்செடிகளும், பப்பாளி, மல்லிகை, செண்டுமல்லி செடிகளும், வீரிய ரக தக்காளி, கத்தரி நாற்றுகளும், திசுவாழைக் கன்றுகளும் மானியத்தில் வழங்கப்படுகின்றன.
  பாதுகாக்கப்பட்ட சூழலில் தோட்டக்கலைப் பயிர்கள் சாகுபடி செய்ய பசுமைக் குடில் அமைப்பு, நிழல்வலைக் கூடம் அமைப்பு, நிலப் போர்வைத் திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
  இயந்திரமயமாக்கல் திட்டத்தில் டிராக்டர், பவர்டில்லர், பயிர்ப் பாதுகாப்புக் கருவிகள் திட்டமும் செயல்படுத்தப்படுகிறது. இவற்றைப் பெற விவசாயிகள் தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகங்களில் மூதுரிமைப் பதிவேட்டில் பதிவு செய்து கொள்ள வேண்டும் என்றார்.
  கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் எம். காளிதாசன், வேளாண் இணை இயக்குநர் ராஜேந்திரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai