சுடச்சுட

    

    பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் இளைஞருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தருமபுரி நீதிமன்றம் உத்தரவிட்டது.
    தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகேயுள்ள ஏர்கோல்பட்டியைச் சேர்ந்தவர் சரவணன் (27), தொழிலாளி. இவர் அதே பகுதியைச் சேர்ந்த மலர்கொடி (22) என்பவரைத் திருமணம் செய்துகொள்வதாகக் கூறி பலாத்காரம் செய்துள்ளார். ஆனால், அவர் கூறியப்படி திருமணம் செய்யவில்லை.
    இதுகுறித்து, கடந்த 2013-ஆம் ஆண்டு மலர்கொடி அளித்த புகாரின் பேரில், பென்னாகரம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, சரவணனைக் கைது செய்தனர்.
    இந்த வழக்கு தொடர்பான விசாரணை, தருமபுரி மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
    இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை இவ்வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. இதில், மலர்கொடியை ஏமாற்றி பலாத்காரம் செய்த சரவணனுக்கு மூன்று பிரிவுகளின் கீழ் ஏழு ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து தண்டனையை ஏககாலத்தில் அனுபவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.  இதைத் தொடர்ந்து, அவரை போலீஸார் சிறையில் அடைத்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai