சுடச்சுட

    

    பாப்பிரெட்டிப்பட்டி அருகே மனைவியை எரித்துக் கொல்ல முயற்சி செய்ததாக கணவர் உள்பட இருவரை  போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
    பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், கோழிமேக்கனூரைச் சேர்ந்த பெருமாள் மகன் பெரியசாமி (36). லாரி ஓட்டுநர். இவரது மனைவி கலைச்செல்வி (30). இந்த நிலையில் கலைச்செல்விக்கு அவரது உறவினர் ராஜா என்பவர் பாலியல் தொந்தரவு அளித்ததாகக் கூறப்படுகிறது. இதனால் அவர்களிடையே விரோதம் ஏற்பட்டுள்ளது.  இந்த நிலையில், பெரியசாமியிடம், அவரது மனைவியின் நடத்தைகள் குறித்து ராஜா புகார் கூறினாராம். இதனால் ஆத்திரமடைந்த பெரியசாமி, ராஜா ஆகியோர் சேர்ந்து கலைச்செல்வியை தாக்கியதாகக் கூறப்படுகிறது. மேலும், கலைச்செல்வி மீது மண்ணெண்ணெய் ஊற்றித் தீ வைக்க முயற்சி செய்தார்களாம்.  இந்தச் சம்பவம் குறித்து அவர் அளித்த புகாரின் பேரில், கலைச்செல்வியின் கணவர் பெரியசாமி (36), உறவினர் மாதப்பன் மகன் ராஜா (34) ஆகியோரை பாப்பிரெட்டிப்பட்டி போலீஸார் கைது செய்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai