Enable Javscript for better performance
அம்பேத்கர், பெரியார் விருதுகள் பெற விண்ணப்பிக்கலாம்- Dinamani

சுடச்சுட

    

    அம்பேத்கர், பெரியார் விருதுகள் பெற விண்ணப்பிக்கலாம்

    By தருமபுரி/கிருஷ்ணகிரி  |   Published on : 03rd November 2016 07:56 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஆதி திராவிடர் நலத் துறை சார்பில் வழங்கப்படும் அண்ணல் அம்பேத்கர் விருது பெற தாழ்த்தப்பட்ட மக்களுக்காக பணியாற்றி வரும் நபர்கள் தங்களது விவரங்களுடன் விண்ணப்பிக்கலாம் என தருமபுரி மாவட்ட ஆட்சியர் கே. விவேகானந்தன் அழைப்புவிடுத்துள்ளார்.
    இதுதொடர்பான விவரங்களை www.tn.gov.in/ta/forms/deptname/1 என்ற இணையதளத்தில் அறியலாம். விண்ணப்பப் படிவங்களை பதிவிறக்கம் செய்து நிரப்பி, வரும் 5-ஆம் தேதிக்குள் மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலகத்தில் அளிக்க வேண்டும்.
    தந்தை பெரியார் விருது: இதுகுறித்து கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
    விருது பெறுபவர்களுக்கு ரூ. ஒரு லட்சம் பொற்கிழி, ஒரு சவரன் தங்கப் பதக்கம், தகுதியுரை வழங்கப்படும். 2016-ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் பெரியார் விருது வழங்குவதற்கு உரியவர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.
    சமூக நீதிக்காகப் பாடுபட்டவர்கள், அவர்கள் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் சமுதாயத்தைச் சேர்ந்த மக்களின் சமூக, பொருளாதார மற்றும் கல்வி மேம்பாடு அடைய மேற்கொண்ட முயற்சிகள், அந்த மக்களின் வாழ்க்கைத் தரம் உயர மேற்கொள்ளப்பட்ட பணிகள், கடந்த ஆண்டுகளில் அவர்களால் மேற்கொள்ளப்பட்ட பணிகள், சாதனைகள் ஆகியவற்றுடன் அவர்களது பெயர், சுயவிவரம் அடங்கிய முழு விவரங்களுடன் நவம்பர் 10-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai