சுடச்சுட

    

    தருமபுரி அருகே இருவேறு இடங்களில் நிகழ்ந்த விபத்தில் இருவர் உயிரிழந்தனர்.
     தருமபுரி அருகே செட்டியூரைச் சேர்ந்த தொழிலாளர்கள் காசிநாதன் (36), மணிகண்டன். இருவரும் புதன்கிழமை இருசக்கர வாகனத்தில் உங்கரானஅள்ளி அருகே சென்றபோது டயர் வெடித்தது.
     இதில், வாகனம் நிலைத் தடுமாறி இருவரும் கீழே விழுந்ததில் பலத்த காயமடைந்த காசிநாதன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். மணிகண்டன், தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து, மதிகோன்பாளையம் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
     இதேபோல, அதியமான்கோட்டை அடுத்த ஏலகிரியான்கொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி முனுசாமி (55). இவர், அங்குள்ள சாலையை செவ்வாய்க்கிழமை கடந்து சென்றபோது எதிரே வந்த அடையாளம் தெரியாத வாகனம் அவர் மீது மோதியது. இதில், நிகழ்விடத்திலேயே அவர் உயிரிழந்தார். அதியமான்கோட்டை போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai