Enable Javscript for better performance
இளைஞர் மீது தாக்குதல்: 11 பேர் மீது வழக்குப் பதிவு- Dinamani

சுடச்சுட

    

    இளைஞர் மீது தாக்குதல்: 11 பேர் மீது வழக்குப் பதிவு

    By அரூர்,  |   Published on : 03rd November 2016 08:16 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    இளைஞர் மீது தாக்குதல் நடத்தியதாக 11 பேர் மீது போலீஸார் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்தனர்.
     பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், மாரியம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த முருகன் மகன் குமார் (21). இவர் திங்கள்கிழமை இரவு அதிகாரப்பட்டி பேருந்து நிலையம் அருகே சென்றபோது சாலையில் சிறுவர்கள் பட்டாசு வெடித்துக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. அப்போது அந்தப் பகுதியைச் சேர்ந்த சிலருடன் ஏற்பட்ட தகராறில் குமாரை தாக்கியதாகக் கூறப்படுகிறது.
     இந்தச் சம்பவம் குறித்து அவர் அளித்த புகாரின் பேரில், அதிகாரப்பட்டியைச் சேர்ந்த மாரியப்பன் (39), சபரி (21), சுதாகர் ஆகியோர் மீது அ.பள்ளிப்பட்டி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். மேலும், முருகேசன் மகன் சபரி (21) அளித்த புகாரின் பேரில்,
     மாரியம்பட்டியைச் சேர்ந்த குமார் (21), திருப்பதி, சின்னராஜ் மகன் சுபாஷ், நந்தகுமார், முருகேசன் மகன் குமார், கலையரசன் உள்ளிட்டோர் மீது போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai