சுடச்சுட

  

  கொளகம்பட்டி கூட்டுறவுச் சங்கச் செயலர் தாற்காலிக பணியிடைநீக்கம்: பணியாளர்கள் வேலைநிறுத்தம்

  By அரூர்,  |   Published on : 03rd November 2016 08:14 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  அரூரை அடுத்த கொளகம்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்கச் செயலாளர் தாற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டதைக் கண்டித்து பணியாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் புதன்கிழமை ஈடுபட்டனர்.
   பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், கொளகம்பட்டியில் அமைந்துள்ளது கொளகம்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்கம் (எஸ்-649).
   இந்தச் சங்கத்தில் எச்.தொட்டம்பட்டி, நாச்சினாம்பட்டி, பாப்பிசெட்டிப்பட்டி, பெத்தூர், ஆண்டிப்பட்டி புதூர் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் உறுப்பினர்களாக உள்ளனர்.
   இந்தச் சங்கத்தில் கூட்டுறவுச் சங்க தலைவருக்கும், செயலருக்கும் இடையே கருத்து வேறுபாடு இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், சங்கச் செயலர் துரைராஜ் தாற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
   இதைக் கண்டித்து சங்கத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் 8 நியாய விலைக் கடைகளில் கடந்த இரு தினங்களாக அத்தியாவசியப் பொருள்கள் விநியோகிக்கப்படவில்லை.
   மேலும் கூட்டுறவுச் சங்க அலுவலகத்தில் பணிபுரியும் பணியாளர்கள் அலுவலகத்தைப் பூட்டிவிட்டு வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனராம்.
   இதுகுறித்து கூட்டுறவுக் கடன் சங்கத் தலைவர் தீர்த்தகிரி கூறியதாவது:
   சங்கத்தில் நிகழாண்டில் பயிர் கடன்கள் கேட்டு 180-க்கும் மேற்பட்ட விவசாயிகள் விண்ணப்பம் அளித்துள்ளனர். ஆனால், ஒருவருக்கு கூட இதுநாள் வரை கடனுதவி
   அளிக்கப்படவில்லை.
   பயிர் கடன்கள் வழங்காமல் காலம் தாழ்த்தி வருவதாலும், சங்க நிர்வாகத்துக்கு உரிய ஒத்துழைப்பு அளிக்காத காரணத்தாலும் சங்கச் செயலர் துரைராஜை தாற்காலிக பணிநீக்கம் செய்து, அதற்கான கடிதம் பதிவு அஞ்சல் மூலம் அவருக்கு அனுப்பப்பட்டுள்ளது என்றார்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai